முதல் முதலா தமிழ்ல எழுதறேன். கண்டபடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கும். கண்டுக்காதீங்க :)
ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சு ஒரு படம் பார்த்தேன். அதான் 2004ல வந்த 50 First Dates.
ஆடம் சாண்ட்லர், ட்ரூ பேரிமோர், அம்னீஷியா மற்றும் காதல் தான் கேரக்டர்ஸ். படம் ஸ்டார்ட்டிங் டு எண்ட் நல்லா சிரிக்கலாம். இது உலக சினிமா எல்லாம் இல்லை… ஒரு ஆர்டினரி ரோம்-காம். But கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்னு தான் நான் சொல்வேன். நான் விமர்சனம் எல்லாம் எழுதபோறது இல்லவேயில்லை. பயப்படாதீங்க :)
இந்த படத்தோட செண்டிமெண்ட் “Falling in love with the same person over and over again”.
சிம்பிள் ஸ்டோரி லைன்… ஆனா செம லாஜிகல். நம்ம தினசரி வாழ்க்கைல இத்த ஃபாலோ பண்ணாலே போதும். வீட்ல ஒரு பிரச்சனையும் வராது. சிம்ப்ளி fall in love with your spouse again and again… everyday. நடைமுறையில் கஷ்டம் தான்.. ஏன்? நாம் நேற்றைய சண்டைகளை மட்டுமா நினைவில் வைத்திருக்கிறோம்… சென்ற வாரம், சென்ற மாதம், சென்ற வருடம் என சச்சரவு பட்டியல் எல்லாதையுமே அந்த சின்ன மண்டைக்குள்ளே போட்டு நாமளும் குழம்பி நம்ம வீட்ல இருக்குறவங்களையும் குழப்பி…. உஸ்ஸ்ஸ்ஸ்
ஆனா சும்மா சொல்லக் கூடாது… சிலர் இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பாங்க. நேத்து சொன்னதையே மறந்துபோய் சந்தோஷமா இருப்பாங்க. நாம தான் என்னடா இப்டி இருக்காங்களேன்னு மண்டைய ஒடச்சுகிட்டு புது பிரச்சனைய ஆரம்பிப்போம்.
ஒரு வகைல பார்த்தா இந்த படத்தோட ஹீரோயின் போல இருந்துட்டா நல்லதோன்னு தோணுது. ஒரு வாக்கியம் உண்டு “Never go to sleep angry”. எவ்வளவு பேரு இத follow பண்ணுறாங்க? சத்தியமா நான் அந்த catergoryல இல்லை. இனிமே try பண்ணலாம்.
என்னோட கருத்து… நல்ல நினைவுகளை மட்டும் நினைவில் வைத்து லெட்ஸ் மேக் வே டு எ ஹாப்பி ஹோம் :-)
தமிழில் ஒரு நல்ல ஆரம்பம் !! பின்னுங்க ;-)
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட் !
ReplyDeleteநல்ல அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கிறீர்கள் ஷ்ரீ.நன்றாக எழுதினீர்கள்,மேலும் எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி கருந்தேள்...
ReplyDelete@கீதப்ப்ரியன் ... ரொம்ப நன்றி. தமிழில் எழுத ட்ரை பண்ணறேன் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் ???).
நல்லவே எழுதி இருக்கிங்க.
ReplyDeleteகூடவே "இந்த படத்தோட ஹீரோயின் போல இருந்துட்டா நல்லதோன்னு தோணுது" சரியாகவே
சிந்திக்கிறீங்க...
"எல்லாதையுமே அந்த சின்ன மண்டைக்குள்ளே போட்டு நாமளும் குழம்பி நம்ம வீட்ல இருக்குறவங்களையும் குழப்பி…. உஸ்ஸ்ஸ்ஸ்" நல்லதொரு பகர்வு....
தொடருங்கள் உங்கள் பதிவுகளை தாய் தமிழில்.
சாசெரோ ...
// fall in love with your spouse again and again… everyday. நடைமுறையில் கஷ்டம் தான்..//
ReplyDeleteராஜேஷ்,
பதிவை ஒழுங்கா படிச்சீங்களா?
nandri சாசெரோ :-)
ReplyDeleteMohan... Yen indha villathanam :P
ReplyDelete